இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் ஐஎம்எஃப் அமைப்புக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனர், இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைப்பார் என்றும் தெரிவித்தார். இதனிடையே இந்தியாவின் தாக்குதலால் கடும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் எனவே நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வழங்க வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், உலக வங்கி, ஆசிய வங்கி, சர்வதேச நிதியம் மூலம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு கிடைக்கும் கடனை தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாடு, கடனுதவி கிடைக்காவிடில் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும என்பது குறிப்பிடத்தக்கது.
The post பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன் ஆழமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் : ஐஎம்எஃப் அமைப்பிற்கு இந்தியா கோரிக்கை!! appeared first on Dinakaran.
