பீகார்: இனி கூட்டணி மாறப்போவதில்லை, எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 7வது யூத் கேலோ இந்தியா தொடரின் தொடக்க விழா நேற்றைய தினம் பீகாரில் மிக பிரமாண்டாக நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 15ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களும், 21 வயதுக்குட்பட்ட கல்லுாரி மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இத்தொடருக்கான ஜோதியை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பெற்றுக்கொண்டு அதனை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இனி கூட்டணி மாறப்போவதில்லை, எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும் அன்றும் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அது இனி மீண்டும் நடக்காது. என்னை முதலமைச்சர் ஆக்கியது யார்? அது மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தான் என்று தெரிவித்திருந்தார்.
நிதிஷ் குமாரின் கூட்டணி தாவல்கள் இதுவரை,
* 1990களில் பாஜக கூட்டணியில் அங்கும் வகித்த நிதிஷ் குமார், 2013-ல் ஆண்டு அதிலிருந்து விலகினார்.
* பின்பு லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி வைத்த அவர், 2017ல் அங்கிருந்து வெளியேறி மீண்டும் பாஜக கூட்டணியில் ஐக்கியம் ஆனார்!
* 2022ம் ஆண்டு வரை இந்த கூட்டணி நீடித்தது.
* பிறகு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த அவர்,
* கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறி மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணைந்தார்.
The post இனி கூட்டணி மாறப்போவதில்லை, எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன்: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு appeared first on Dinakaran.
