கோவை, மே 5: கோவை மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் திரிபில்லிங், பிட்னஸ் உள்ளிட்ட திறன்களை வைத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவை உப்பிலிப்பாளையம் சிஎஸ்ஐ அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மைதிலி, பாண்டி செல்வி, ஹெலன் கிளோரி ஆகிய மூன்று மாணவிகள் உள்பட பல்வெறு பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 18 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு பயிற்சியாளர் யோகானந் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஹாக்கி யுனைட் அப் தமிழ்நாடு சார்பாக 16 வயதினருக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று துவங்கியது. வரும் 7ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் கோவை மாவட்டம் உள்பட மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று லீக் சுற்றுகள் ஆரம்பமானது. இதில் கோவை மாவட்ட பெண்கள் ஹாக்கி அணியுடன் ராணிப்பேட்டை பெண்கள் ஹாக்கி அணி மோதியது. இதில் கோவை மாவட்ட பெண்கள் ஹாக்கி அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
The post மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி கோவை மாவட்ட பெண்கள் அணி வெற்றி appeared first on Dinakaran.
