நடிகர் விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார்!

ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா மீது ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்.26ல் ரெட்ரோ திரைப்பட நிகழ்வில் பழங்குடியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில்நடந்தது. இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் தந்தை சிவகுமார், சூர்யா மற்றும் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயயங்கரவாத தாக்குதலுக்கு விஜய் தேவரகொண்டா கண்டனம் தெரிவித்தார்.

காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது அங்குள்ள மக்கள் எங்களுடையவர்கள் எனவும் அவர் பேசினார். மேலும் காஷ்மீர் பகல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களை போன்றது என பேசினார். இதையடுத்து திட்டுவதற்கு பழங்குடியின மக்களை அவர் சுட்டிக்காட்டியதாக சர்ச்சை கிளம்பியது.

இதற்கு தெலுங்கானா பழங்குடியின அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பழங்குடியின மக்களை சுட்டிக்காட்டி பேசியது குறித்து ஐதராபாத்தை சேர்ந்த லால் சவுகாள் என்பவர் விஜய் தேவரகொண்டா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

The post நடிகர் விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார்! appeared first on Dinakaran.

Related Stories: