டெல்லி :புழுங்கல் அரிசி, உமி நீக்கப்பட்ட அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வதை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுஇவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. அரிசிக்கான 20% ஏற்றுமதி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. உலகளவில் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்துவரும் நாடாக உள்ளது இந்தியா.