கனடாவில் பயங்கரம்; கூட்டத்திற்குள் கார் புகுந்து 9 பேர் பலி

வான்கூவர்: கனடா நாட்டின் வான்கூவர் நகரில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டினரின் பாரம்பரிய நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் மக்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதியில் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் காரில் அடிபட்டு 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்பதை உறுதியாக கூறலாம் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

The post கனடாவில் பயங்கரம்; கூட்டத்திற்குள் கார் புகுந்து 9 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: