சட்டப்பேரவையில் திடீரென கால் இடறி விழுந்த அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நிறத்தின் போது மின்சார துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவையில் இருந்த அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் திடீரென எழுந்து வெளியே சென்றார். அவர் நடந்து சென்ற சில நொடிகளில் கால் இடறி திடீரென சட்டப்பேரவை கூடத்தில் விழுந்தார். அந்த நேரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் துரைமுருகன் கீழே விழுந்ததை பார்த்து பதறி அவரை துக்க முயன்றார். அப்போது அவருடன் சேர்ந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் சபாநாயகர் அருகில் இருந்தவர்கள் தூக்கினர்.

அவர் கீழே விழுந்ததை பார்த்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து என்னாச்சு என்று பதறினர். சிறிது நேரத்தில் அமைச்சர் துரைமுருகன் எழுந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவர் அனைவரையும் பார்த்து உட்காருங்கள். எனக்கு ஒன்றும் இல்லை என்று தெரிவித்தார். அதன் பின்னரே அவை அமைதியானது. அதன் பின்னர் துரைமுருகன் அவை நடவடிக்கையில் பங்கேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் துரைமுருகன் கீழே விழுந்ததை அறிந்து என்ன ஆனது என்று அவரிடம் விசாரித்தார். அமைச்சர் துரைமுருகன் நடந்ததை கூறினார். அதைக் கேட்ட மு.க.ஸ்டாலின் பார்த்து நடந்து செல்லுங்கள் என்று கூறினார்.

The post சட்டப்பேரவையில் திடீரென கால் இடறி விழுந்த அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Related Stories: