மன்னார்குடி : ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்\” திட்டத்தின் கீழ் கூத்தாநல்லூர் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேற்று காலை 9 மணி முதல் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 23 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் படி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலு வலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.
அதன் அடிப்படையில்,முதலாவதாக, எருக்காட்டூர் ஊராட்சியில், ரூ.3.10 இலட்சம் மதிப் பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப் பட்டு வரும் குடியிருப்பு வீடுகளையும், கலைஞரின் கனவு இல்லம் (2025-2026) திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அளவு செய்யப் பட்டுள்ளதனையும், கலை ஞரின் கனவு இல்லம் (2024-2025) திட்டத்தின் கீழ் முடிவுப்பெற்றுள்ள கலைஞ ரின் கனவு இல்லம் வீடுகளையும் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கண்கொடுத்தவனிதம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர் ச்சி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப் பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், மேலராதாநல்லூர் ஊராட்சியில், பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 51 லட்சம் மதிப் பீட்டில் மேலராதாநல்லூர், முசிறியம் வழியாக மன்னார்குடி வரை தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதையும் மாவட்ட கலெக்டர் மோகனச் சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கண்கொடுத்த வனிதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின்; விவரம் மற்றும் இருப்பு விவரம் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
கண்கொடுத்த வனிதம் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் (2025-2026) திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப் படவுள்ள கலைஞர் கனவு இல்லம் அளவு செய்யப் பட்டுள்ளதையும், முசிரியம் ஊராட்சி பகுதியிலுள்ள நியாய விலைக் கடையில் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு இருப்பதை மாவட்ட கலெக்டர் மோகனச் சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அத்திக்கடை ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோ யாளி விவரப்பதிவேடு மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் இருப்பு விவரம் குறித்த விவரப்பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுவருவதை ஆய்வு செய்தார்.
கூத்தாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரூ.1 கோடியே 12 லட்ச த்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக 5 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பள்ளியில் மாணவர் களுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வேளுக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.29.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவல கம் கட்டப்பட்டு வருவதையும், அரிச்சந்திரபுரம் ஊராட்சி யில், நபார்டு (2023-2024) திட்டத்தின் கீழ் ரூ.385 லட்சம் மதிப்பீட்டில் (காளிமங்கலம் முதல் சுபத்ரி யம் வரை) பாலம் அமைக்கப்பட்டுவருவதையும், அரிச்சந்திரபுரம் ஊராட்சி, திட்டச்சேரி கிராமத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.
The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.