கூடலூர் வனக்கோட்டத்தில் வரையாடு கணக்கெடுப்பு பணி துவங்கியது

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் களஇயக்குனர்,கூடலூர் மாவட்ட வன அலுவலர்,உதவி வனபாதுகாவலர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கூடலூர் வனக்கோட்டத்தில் நேற்று துவங்கி வருகிற 27 ம் தேதி வரை நான்கு நாட்கள் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது.

ஓவேலி வனச்சரகத்திற்குட்பட்ட தவளைமலை,பெல்வியூ,டெரஸ் குண்டுக்கல்,எல்ல மலை உள்ளிட்ட நான்கு பிளாக்குகளில் 4 குழுக்களாக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.புல்வெளிகள், மலைப்பகுதி,பாறைகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் நேரடியாக கணெக்கெடுக்கும் பணிகளில் ஈடுபடும் வனத்துறையினர் நடுவட்டம்,டெரஸ் மற்றும் பாண்டியார் பகுதி முகாம்களில் தங்கி இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஓவேலி வனச்சரகத்தில் பணிபுரியும் வனப் பணியாளர்கள் மூலம் இந்தக் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.

The post கூடலூர் வனக்கோட்டத்தில் வரையாடு கணக்கெடுப்பு பணி துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: