விருதுநகர், ஏப்.25: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் விருதுநகர் மாவட்ட மையம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ மற்றும் குரூப்- 4 தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு 27ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாரமும் பாடத்தின் அலகு வாரியாக தேர்வு நடத்தப்படும். அனுபவமிக்க ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளாக பயிற்சி அளித்து 6000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இரவீந்திரன் திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம் சாலையில், குமார் மெடிக்கல்ஸ் எதிர்புறம் பாலாஜி ஸ்டீல்ஸ் மாடியில் அமைந்துள்ள மீனாட்சி டியூசன் சென்டரில் வைத்து தொடங்கி வைக்கின்றார்.
படித்த இளைஞர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணியில் சேர்ந்திட அழைக்கின்றோம். பயிற்சி தொடர்பான விவரங்களை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குருசாமியை 94860 11955 என்ற கை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குருசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி: 27ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.
