குறிப்பாக இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 12 பேரிடம் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு அதனை சாட்சியங்களாக பதிவு செய்தனர். இந்நிலையில், 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானை இரண்டாவது முறையாக ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தார்கள். இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள சயான், சிபிசிஐடி முன் 2-வது முறையாக ஆஜராகியுள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் உள்ள சயான் ஆஜராகியுள்ளார். சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான குழு சயானிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக சிபிசிஐடி முன்பு சயான் ஆஜர்!! appeared first on Dinakaran.