காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இல்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நேற்று தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் தமிழர்களும் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த டாக்டர் பரமேஸ்வரன் தந்தை பெயர் ஆறுமுகம், சந்தனு வயது 83), ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசும் நேற்று உடனடியாக உதவி எண்களை அறிவித்தது. இந்த நிலையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இல்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. அதில்,

*காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

*2 பேரின் உடல்நிலை சீராக உள்ளது; ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* பாதிக்கப்பட்டோருடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேசியுள்ளனர்.

* தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரிகள் இன்று மாலை காஷ்மீர் சென்றவுடன் பணிகளை மேற்கொள்வர் என தெரிவித்தார்.

The post காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இல்லை: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: