இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் சார்பில் பாஸ்டன் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘டிரம்ப் நிர்வாகம் தனது நிதி அதிகாரத்தை பயன்படுத்தி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த முடிவுகளை கட்டுப்படுத்த பார்க்கிறது. இது அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு எதிரானது. மேலும், இது கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் மீறுகிறது. நிதி உதவியை நிறுத்துவதால் மாணவர்களின் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
The post நிதி உதவி நிறுத்தியதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு: அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.