தஞ்சாவூர் மாவட்டத்தில் 8,700 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.21 கோடி உதவித்தொகை

* 33,410 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை

* கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

தஞ்சாவூர் : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 21 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் தத்துவத்திற்கேற்ப ஏழை எளியோர் நலன் காப்பதில் எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கின்படி தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிற்கே முன்னோடியாக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றால் மிகையல்ல.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இதுநாள் வரை மொத்தம் 33,410 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அதில் 33,027 பயனாளிகளுக்கு (98 சதவீதம் பாதிக்கப்பட்டோர்) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7,163 பயனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகையும், கடுமையாக கை, கால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 962 பயனாளிளும்,

தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 199 நபர்களுக்கும், 314 தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் 70 நபர்களும் பயனடைந்து வருவதாக கலெக்டர் கூறியுள்ளார்.

அதாவது, இத்திட்டத்தில் 8,708 நபர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வீதம் 12 மாதத்திற்கு 20,89,92,000 (ரூபாய் இருபது கோடி எண்பத்தி இரண்டு இலட்சம்) பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அரசு காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியும் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.

மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முலம் 09 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளுக்கு உணவூட்டு மானியமாக 67,20,158 மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய 27 நபர்களுக்கு ரூ.90,72,000, மற்றும் 2 காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளிகளும், கை, கால் பாதி க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக 02 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.

குழந்தைகளின் குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக காது கேளாத(EIC HI), மனவளர்ச்சி குன்றிய(EIC MR), ஆட்டிசம்(EIC AUTISM) பாதித்த குழந்தைகளுக்கு ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் வருடந்தோறும் ரூ.33,14,000 மதிப்பில் சிறப்பாசிரியர்களு க்கு ஊதியமானியம் வழங்கப்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கபட்டோரை பாதுகாக்கும் இல்லங்களுக்கு ரூ.24,29,600 மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு ரூ.24,96,500 மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 3,206 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.51 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன வங்கிக்கடன் மான்யதிட்டம் மானிய தொகையாக 25,000 மற்றும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்,

கல்வி உதவித்தொகை திட்டம், வாசிப்பாள் உதவித்தொகை திட்டம், தெருமுனை பிரா ச்சாரம் போன்ற திட்டங்களுக்கு ரூ.1கோ மதிப்பிலான திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 5 வகையான திருமண உதவித்தொகை திட்ட ங்கள் 68,50,000 மதிப்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு ள்ளது என்றும் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 8,700 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.21 கோடி உதவித்தொகை appeared first on Dinakaran.

Related Stories: