பெரம்பூர், ஏப்.22: அயனாவரம் பகுதியில் இ-சிகரெட் விற்கப்படுவதாக கிடைத்த தகவல்படி, அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அயனாவரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தபோது ரூ.7500 மதிப்புள்ள 5 இ-சிகரெட் இருந்தது. அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அயனாவரம் யூ.ஐ.நகரை சேர்ந்த பிரணவ் குமார் (19) என்பதும் ஆன்லைன் மூலம் இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து பிரணவ் குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
The post இ-சிகரெட் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.