பாட்டியை கொன்ற சிறுவனை பிடிக்க போலீசார் தீவிரம்

பரமத்திவேலூர், ஏப்.22: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70). இவர் நேற்று முன்தினம், வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், வேலகவுண்டம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதில், உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்த விவகாரத்தில், 16 வயது பேரனை பாவாயி கண்டித்ததால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், பாவாயி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிறுவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.

The post பாட்டியை கொன்ற சிறுவனை பிடிக்க போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: