புதுடெல்லி: அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ரியல் எஸ்டேட், பொன்சி உள்ளிட்ட நிதி மோசடிகளால் ஏமாற்றப்பட்ட முறையான உரிமையாளர்கள் மற்றும் உரிமைகோருபவர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான ஏற்பாட்டை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு முதல் தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளது. இந்த பிரிவின் கீழ் மொத்தம் ரூ.31,951 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
2024 ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை,ரூ.15,261.15 கோடி சொத்துக்களையும், நடப்பு நிதியாண்டில் (2025-26) ரூ.1,488 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை மீட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சொத்துகளில் ரூ.15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப ஒப்படைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் அமலாக்கத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்’’ என்றனர்.
The post ரியல் எஸ்டேட், பொன்சி மோசடி; ரூ.15,000 கோடி சொத்துக்கள் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை: ஈடி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.