முறைசாரா தொழிலாளர்கள் வெயிலில் பாதுகாத்து கொள்ள சட்டப்பூர்வ உரிமை வேண்டும்: பருவநிலை வல்லுநர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கோடை மாதங்களில் முறைசாரா தொழிலாளர்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஊதியத்துடன் கூடிய வெயில்கால விடுப்பு, இலவச குடிநீர் ஏடிஎம்கள், குளிர்விப்பதற்கான சட்டப்பூர்வ உரிமை உள்ளிட்டவை அவசர தேவையாகி இருப்பதாக பருவநிலை வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாலையோர வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட டெல்லியின் 80 சதவீதத்திற்கும் அதிகமான முறைசாரா தொழிலாளர்கள் கடுமையான வெயில் காரணமாக உடல் நலம் பாதிப்பதோடு வருமான இழப்பையும் எதிர்கொள்கின்றனர். அவர்களில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் பிரச்சாரகர் அம்ருதா கூறுகையில், ‘‘வெப்ப அலைகள் இனி வானிலை நிகழ்வுகள் மட்டுமல்ல, தங்குமிடம், தண்ணீர் அல்லது ஓய்வு இடங்கள் இல்லாதவர்களுக்கு பேரழிவுகள். 61 சதவீத சாலையோர வியாபாரிகள் கடுமையான வெயில் காரணமாக தங்கள் தினசரி வருமானத்தில் 40 சதவீதத்திற்கும் மேலாக இழந்துள்ளனர்.

75 சதவீதம் பேருக்கு வெயில் ஒதுங்க நிழலான இடங்கள் கூட இருப்பதில்லை. இத்தகைய மக்கள் வெயில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வது அவர்களின் அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும். அதிக வெப்ப அலை நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுப்பதற்கான வசதிகள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்’’ என்றார். எனவே, வெயிலால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தீவிர வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வல்லுநர்கள் பல உடனடி தீர்வுகளை முன்மொழிந்துள்ளனர்.

The post முறைசாரா தொழிலாளர்கள் வெயிலில் பாதுகாத்து கொள்ள சட்டப்பூர்வ உரிமை வேண்டும்: பருவநிலை வல்லுநர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: