3 நாள் விடுமுறைக்கு பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவையில்அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 17ம் தேதி சுற்றுலா-கலை பண்பாட்டுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் முறையே அமைச்சர்கள் ராஜேந்திரன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தொடர்ந்து 18ம் தேதி புனித வெள்ளி, 19ம் தேதி சனிக்கிழமை, 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்கு பிறகு பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து துறைரீதியான மானியக்கோரிக்கை நடைபெறும். இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

The post 3 நாள் விடுமுறைக்கு பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: