இதில், கல்லூரி நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பேசும்போது, வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் சிறப்பை நோக்கி முன்னேற வேண்டும். ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் மிக முக்கியம். மாணவர்கள் சமூகத்தில் அறிவு மற்றும் நேர்மையின் சிகரமாக திகழ வேண்டும். மாணவர்கள் திறமையான வல்லுநர்களாக உருவாக, பேராசிரியர்கள் மற்றும் மேலாண்மையின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றார்.
விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவாஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2023 மற்றும் 2024ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 797 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 54 பேருக்கு ரூ.6.75 லட்சம் பரிசுத் தொகையையும், தங்க பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார். முடிவில் கல்லூரி புல முதல்வர் கே.சிவராம் நன்றி கூறினார்.
The post ஆர்எம்கே பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு ரூ.6.75 லட்சம் பரிசுத்தொகை appeared first on Dinakaran.
