ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; 74 பேர் பலி

துபாய்: எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் ஏமனில் 74 பேர் பலியாகினர். பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே போர் கடந்த 15 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது. செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் உள்ள பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இஸ்ரேலை நோக்கி ஹவுதிகள் ஒரு ஏவுகணையை ஏவியதாகவும், அதனை இஸ்ரேல் இடைமறித்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

The post ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; 74 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: