விண்வெளியை நோக்கி நகரும் யுத்தம்; மஸ்கின் ஸ்டார்லிங்கை அழிக்க ரஷ்யா ரகசிய ஆயுதம் தயாரிப்பு..? நேட்டோ உளவுத்துறை தகவல்

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும், அதன் இணைய சேவையை முடக்கி தகவல் தொடர்பை முற்றிலும் சீர்குலைக்க ரஷ்யா முயற்சித்தது. ஆனால், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவை வழங்கும் பணியை மேற்கொண்டது. இதன் மூலம், உக்ரைனின் ராணுவ தகவல் தொடர்புகள் சிக்கலின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகிலேயே எந்த மூலையிலும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் நிறுவனத்தால் மட்டுமே முடியும். அதற்காக விண்வெளியில் ஏராளமான செயற்கைகோள்களை அனுப்பி இணைய உலகில் ஸ்டார்லிங் ஆதிக்கம் செலுத்துகிறது. விண்வெளியிலேயே ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை தூள் தூளாக்கும் வகையில் ரஷ்யா ரகசிய ஆயுதத்தை தயாரித்து வருவதாக நேட்டோ உறுப்பு நாடுகளின் உளவுத்துறை அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.

விண்வெளியில் மனிதர்களால் விட்டுச் செல்லப்பட்ட செயலிழந்த செயற்கைகோள்கள், ராக்கெட் பாகங்கள் சிறு சிறு துகள்களாகவும் பெரிய அளவிலும் வெவ்வேறு வடிவங்களில் குப்பைகளாக சுற்றி வருகின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாக வெடிக்கச் செய்து ஸ்டார்லிங்கின் அத்தனை செயற்கைகோள்களையும் காலி செய்வதுதான் ரஷ்யாவின் திட்டம். ஆனால் இவ்வாறு செய்தால் விண்வெளியில் உள்ள அத்தனை செயற்கைகோள்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ரஷ்யா இந்த திட்டத்தை நிறைவேற்றாது என்றும் சில நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Related Stories: