லாகூர்: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் வங்கதேசத்திற்கு ஆதரவாக பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் இளைஞர் அணி தலைவர் கம்ரான் சயீத் உஸ்மானி கூறியதாவது: வங்கதேசத்தின் இறையாண்மையைத் தாக்கினால், யாராவது வங்கதேசத்தை தீய எண்ணத்துடன் பார்க்கத் துணிந்தால், பாகிஸ்தான் மக்களும், பாகிஸ்தான் ஆயுதப் படைகளும், நமது ஏவுகணைகளும் தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தியாவின் அகண்ட பாரத சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சிகளை பாகிஸ்தான் பொறுத்துக்கொள்ளாது. பாகிஸ்தான் இதற்கு முன்பு இந்தியாவை ஒரு கடினமான சூழ்நிலைக்குத் தள்ளியது. தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே செய்ய முடியும். பாகிஸ்தான் மேற்கில் இருந்தும், வங்கதேசம் கிழக்கில் இருந்தும் தாக்குதல் நடத்த, சீனா அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் கவனம் செலுத்தும் ஒரு சூழ்நிலையும் உருவாகும்.
வங்கதேசம் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையால் (பிஎஸ்எப்) தொந்தரவு செய்யப்படுகிறது. இந்து ராஜ்ஜியத்தை நிறுவுவதற்காக அகண்ட பாரத சித்தாந்தத்தின் கீழ் வங்கதேசத்தை சிதைக்க இந்தியா முயற்சிக்கிறது. பாகிஸ்தான் வங்கதேசத்தில் ஒரு ராணுவத் தளத்தை அமைக்க வேண்டும் . இவ்வாறு அவா் கூறினார்.
