விசாரணையில் அவர், போனிக்ஸ் சின்கர் (20) என்பதும் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும், உள்ளூர் துணை ஷெரீப்பான அவரது தந்தையின் துப்பாக்கியை கொண்டு இந்த வெறிச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். போலீஸ் சுட்டதில் காயமடைந்த போனிக்ஸ் சின்கர்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் சுடப்பட்டு காயமடைந்த 6 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post புளோரிடா பல்கலை.யில் மாணவன் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.