கலசபாக்கம்,ஏப்.18: கலசபாக்கம் அருேக பர்வதமலையில் போதை பொருள் பயன்படுத்தும் இளைஞர்களின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே போைத பொருள் நடமாட்டம் தவிர்க்க வனத்துறை, காவல்துைற கூட்டு ரோந்து தேவை என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பழமையான பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது கோவிலுக்கு சமீபத்தில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் போலீசார் தனிக்கவனம் செலுத்துவது கிடையாது பவுர்ணமி விசேஷ தினங்கள் விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்போது கூட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்ற புகார்கள் உள்ளது. வனத்துறை அதிகாரிகள் மலை அடிவாரத்தில் பக்தர்களை பரிசோதனை செய்து அதன் பிறகு மலையேற அனுமதிக்கின்றனர் இதையும் மீறி ஒரு சில இளைஞர்கள் மறைமுகமான போதைப்பொருட்களை மறைத்து கொண்டு செல்கின்றனர் மலையேறும் போது இதனை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலையேறி செல்லும் இளைஞர்கள் கூட்டத்தில் ஒரு இளைஞர் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருளை பயன்படுத்தும் வீடியோ வைரலாக பரவியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் ஏற்படா வண்ணம் இருக்க வனத்துறை, இந்து சமய அறநிலைத்துறை, போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி விசேஷ தினங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பர்வத மலையில் போதை பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் வனத்துறை, காவல்துறை கூட்டு ரோந்துக்கு ேகாரிக்கை கலசபாக்கம் அருகே வீடியோ வைரல் appeared first on Dinakaran.