பெங்களூரு: கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்கத்தினர் டீசல் உயர்வு, சுங்க கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கையுடன் கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் ராமலிங்கரெட்டி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டியது. இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 3 மாதத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை வாபஸ் பெற்றோம் என லாரிகள் உரிமையாளர் சங்க மாநில தலைவர் சண்முகப்பா கூறினார்.
The post கர்நாடகாவில் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் appeared first on Dinakaran.