புதுடெல்லி: சாலை விபத்துகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. மேலும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி கிடைக்கும் வகையில் விரைவான நெறிமுறைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆறு மாத காலத்துக்குள் அதுகுறித்த விவரங்கள் கொண்ட அறிக்கையை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 91 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்கள் விதிகள், 1961ன்கீழ் ஒரு ஓட்டுநர் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரமும், வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே பணி செய்ய வேண்டும் என்ற விதிகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக சாலை விதிகள் தொடர்பான சட்டம் அடிக்கடி மீறப்படுவதன் காரணமாகவே சாலை விபத்துக்கள் அதிகரிக்கிறது என்பதால் ஒன்றிய அரசு அனைத்து மாநில மன்றம் யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோசித்து இதுகுறித்து உத்திகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
The post எட்டு மணி நேரமே வாகனம் ஓட்ட வேண்டும்: புதிய விதிகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.