துறையூர் அருகே சூறாவளி காற்று; 11 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

துறையூர்: துறையூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமார் 11 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காமாட்சிபுரம், எரகுடி கிராமங்களில் தலா 5 ஏக்கர் பரப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நடப்பட்டிருந்தது. இந்த வாழைகள் காய் காய்த்திருந்தது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது சூறாவளி காற்று வீசியது. இதில் அனைத்து வாழை மரங்களும் சாய்ந்து சேதமடைந்தன.

இது போல் கொப்பம்பட்டி பகுதியிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 20க்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய் துறை அதிகாரிகள் பார்ைவயிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post துறையூர் அருகே சூறாவளி காற்று; 11 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: