கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையில் வேறு எந்த கடைகளும் அமைக்கக் கூடாது. உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகளை அகற்ற வேண்டும். நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது. மெரினா கடற்கரையில் 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தெரிவித்து. மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி.8க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Related Stories: