தொடர்ந்து விரட்டி, விரட்டி சென்று கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்: கார் டிரைவர் கைது

அண்ணாநகர்: கல்லூரிக்கு செல்லும்போது மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கார் டிரைவரை கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2 மாதமாக ஒரு வாலிபர் என்னை பின்தொடர்ந்து கல்லூரிக்கு செல்லவிடாமல் நடுரோட்டில் வழிமறித்து விரட்டி, விரட்டி டார்ச்சர் செய்து வருகிறார். பலமுறை எச்சரித்தும் மீண்டும் என்னை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்துவருகிறார். காதலிக்க மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். ஆபாசமாக பேசுகிறார்.இதனால் நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன். என்னால் சரியாகக் கூட படிக்க முடியவில்லை. எனவே எனக்கு டார்ச்சர் கொடுக்கும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்

இதன் அடிப்படையில், கல்லூரி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கார் டிரைவர் ராஜராஜன்(35) கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து 2 வருடம் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். இதனால் கல்லூரி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தொடர்ந்து விரட்டி, விரட்டி சென்று கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்: கார் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: