அந்தியூரில் காற்றுடன் கனமழை 100 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்: விவசாயிகள் கவலை

அந்தியூர்: அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை காற்றுடன் பெய்த கனமழைக்கு 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகின. ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், குறிப்பாக அந்தியூர், அத்தாணி, சவுண்டப்பூர், வரப்பள்ளம், மேவாணி, பெருந்தலையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழையினால் அத்தாணி அருகே உள்ள தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதி மற்றும் கூகலூர் கிளை வாய்க்கால் பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த இரண்டாம் போக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டன. தற்போது, வயல்வெளிகளில் நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த ஏடிடி 38, 55 நெல் ரகங்கள் வயல்வெளிகளில் மழையினால் சாய்ந்துவிட்டன. தடப்புள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நேற்று பெய்த கனமழையினால் சேதமாகின. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

The post அந்தியூரில் காற்றுடன் கனமழை 100 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: