செய்யாறு, ஏப். 17: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உழவர் சந்தையிடம் காய்கறி கடை வைத்துள்ள முருகன் என்பவரது கடை அருகில் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் பறந்து வந்த மயிலை பத்திரமாக பிடித்து வைத்து செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அதனை பத்திரமாக மீட்டு வனத்துறையினருக்கும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலையத்திற்கு விரைந்து வந்த பாரஸ்டர் கே.ராகவேந்திரன், வாட்சர் செல்வராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் வெங்கட்ராகவன் ஆகியோர் மயிலை பரிசோதணை செய்து மயில் நல்ல நிலையில் உள்ளதாகவும், இது 3 வயது பெண் மயில் என தெரிவித்தனர். மேலும் நல்ல நிலையில் இருந்த பெண் மயிலை பாரஸ்டர் ராகவேந்திரன், வாட்சர் செல்வராஜ் ஆகியோர் பெண் மயிலை பெற்று வெம்பாக்கம் தாலுக்கா பூதேரி புல்லவாக்கம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
The post பறந்து வந்த மயில் மீட்பு செய்யாறு அருகே appeared first on Dinakaran.