வதோதரா: நடிகர் சல்மான் கானின் காரில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைத்து அவரது வீட்டிற்குள் நுழைந்து பாதுகாவலர்களை தாக்குவதாக ஒரு நபர் மிரட்டல் விடுத்து இருந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் குஜராத்தின் வதோதராவின் வாகோடியா தாலுகாவை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்றபோது அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்பதும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.
The post சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்: விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.