மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூடுகிறது. செயற்குழு உறுப்பினர்களுடன் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்த பிறகு அதிமுக செயற்குழு முதல் முறையாக கூடுகிறது. ஏற்கனவே செயற்குழு, பொதுக்குழுவை கூட்டாமல் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டதால் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வகையில் செயற்குழுவில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: