இந்திய வம்சாவளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் பெண் அதிகாரி டிஸ்மிஸ்: ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் நடவடிக்கை

நியூயார்க்: ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய வம்சாவளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் பெண் அதிகாரி ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சர்வதேச புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் கலந்துகொண்ட, மைக்ரோசாப்டின் 50வது ஆண்டு விழா கூட்டத்தில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான கருத்தை கூறியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் பெண் அதிகாரி வனியா அகர்வால் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த 4ம் தேதி நடந்த விழாவில், வனியா அகர்வால் பேசும்போது, ‘மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காசாவில் 50,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். நீங்கள் வேசதாரிகள்’ என்றார். அப்போது அந்த மேடையில் பில் கேட்ஸும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் இருந்தனர். இந்த ஆதரவு பேச்சு காரணமாக வனியா அகர்வால் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

The post இந்திய வம்சாவளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் பெண் அதிகாரி டிஸ்மிஸ்: ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: