அந்த கும்பல் சிறுமியையும் வாலிபரையும் மிரட்டி தனித்தனியே மறைவான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் 3 பேர் சிறுமியை பலாத்காரம் செய்தனர். மீதி உள்ளவர்கள் அவரது கம்மல், கையில் வைத்து இருந்த ரூ.5 000 பணத்தை பறித்து விட்டு ஓடி விட்டனர். மேலும் அந்த கும்பல் வாலிபரிடம் இருந்து வலுக்கட்டாயமாக யுபிஐ மூலம் ரூ.5000 பணத்தை தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சிறுமி பலாத்கார வழக்கில் 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரை தீவிரமாக தேடி வருகிறோம் என காஸ்கஞ்ச் எஸ்பி அங்கிதா சர்மா நேற்று தெரிவித்தார்.
The post உபியில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்: 8 பேர் கைது appeared first on Dinakaran.