அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, தண்ணீர் மற்றும் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர், அப்பகுதி மக்களின் தாகத்தை தணிக்கும் தர்பூசணி, கிர்ணி பழங்கள், வெள்ளரி, இளநீர், மோர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றை வழங்கினார். இதில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் கோ.காமராஜ் உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் அந்தந்த அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பம்மல் தெற்கு பகுதி திமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
The post பம்மல் மண்டல அலுவலகம் அருகில் திமுக சார்பில் நீர், மோர், தண்ணீர் பந்தல் திறப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.