திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்: திவ்யா சத்யராஜ் பேச்சு

பெரம்பூர்: முதல்வர் முதல்வர் பிறந்த நாளையொட்டி நடைபெற்று வரும் மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவின் 49வது நிகழ்ச்சியாக சென்னை கொளத்தூர் ஜெயின் பள்ளியில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘பலனை எதிர்பாரா பண்பாளர்; நிலையில் தடம்மாறா நெறியாளர்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் மாலை பொதுக்கூட்டம் நடந்தது. மாமன்ற உறுப்பினர் அமுதா பொன்னிவளவன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இசை கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன், மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார், முனைவர் பர்வின் சுல்தானா, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு, தேப ஜவகர், வானவில் விஜய், துரை கண்ணன், ஜார்ஜ் குமார், பொன்முடி, பொன்னிவளவன் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் பேசும்போது, ‘திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபோது மிகவும் இக்கட்டான காலநிலை கொரோனா உச்சத்தில் இருந்தது. அதனை வெல்ல பல்வேறு போராட்டங்களை அவர் மேற்கொண்டார். ஆனால் பாஜ தலைவர்கள் கொரோனாவை விரட்ட விளக்கு பிடியுங்கள், ரத யாத்திரை செல்லுங்கள் என கூறி அவர்களது மதத்தை வளர்ப்பதில் குறிக்கோளாக இருந்தனர்.

தற்போது சிலர் மாற்றம் வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு அனைத்திலும் தற்போது தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பிறகு எதற்கு மாற்றம் வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு பெண்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மையாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் தமிழக முதலமைச்சரின் கடின உழைப்புதான்,’ என்றார்.

கர்நாடக இசை கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் பேசுகையில், ‘பெண்களுக்கு மாதம் ரூ.1000 என்ற வகையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு குடும்பத்தில் ஒரு பொருளாதார வலிமை மிக்க இடம் கிடைக்கும் விதமாக ஒரு மகத்தான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார் நம் முதல்வர்,’ என்றார்.

முனைவர் பர்வின் சுல்தானா பேசுகையில், ‘பெண்களின் பாதுகாப்பு அரனாக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார். சட்டத்தின்படி ஜனநாயக விதியின்படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்களும் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறார்,’ என்றார்.

The post திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்: திவ்யா சத்யராஜ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: