துணை ஜனாதிபதி வருகை புதுவையில் நாளை டிரோன்கள் பறக்க தடை

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவு: புதுச்சேரிக்கு நாளை (29ம் தேதி) துணை ஜனாதிபதி புதுச்சேரிக்கு வரும்போது, பலத்த பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நாளை முழுவதும் புதுச்சேரி பகுதியை பறக்க தடை செய்யப்பட்ட மண்டலம் என்று அறிவித்து, ஆளில்லாத வான்வெளி விமானங்கள், டிரோன்கள், மைக்ரோலைட் விமானங்கள், பாரா கிளைடர்கள், பலூன்கள், காத்தாடிகள் உள்ளிட்ட எந்த வகையான விமான சாதனங்களையும் பறக்க விடுவது தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் சட்ட நடவடிக்கைகளின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related Stories: