சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக்காண, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையை வட மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 தினங்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு குடும்பம் குடும்பமாக வந்து பூங்காவில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசித்தனர். இதில், நேற்று முன்தினம் 13 ஆயிரம் பேரும், நேற்று 17 ஆயிரம் பேரும் குவிந்தனர்.
பூங்காவில் உள்ள யானைகளுக்கு சிறப்பு உணவுகளாக ராகி உருண்டை நேற்று வழங்கப்பட்டன. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் கண்டு ரசித்தனர். மேலும், பூங்காவுக்கு கார் வேன் மற்றும் பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒரே நாளில் திரண்டு வந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான பெருங்களத்தூர் முதல் ஊரப்பாக்கம் வரையிலும், இதேபோல் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
