டெல்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: “டெல்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது மத சுதந்திரம் மீதான பாஜ அரசின் நேரடி தாக்குதல்” என காங்கிரஸ் சாடி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயம், அமைதியான முறையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்தி வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு ஊர்வலத்தை நடத்த டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. மத ஊர்வலங்கள் இந்தியாவில் உள்ள பல நம்பிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதி. அதன்படி கிறிஸ்துவர்களின் சிலுவை ஊர்வலம் கிறிஸ்துவ சமூகத்தின் ஒரு பாரம்பரியம். இது பக்தி, சமூக நல்லிணக்கத்தை குறிக்கிறது. வௌிப்படையான, நியாயமான காரணங்கள் ஏதுமின்றி அனுமதி மறுக்கப்பட்டது, ஒருவரின் மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கும், அடிப்படை உரிமையை நிலைநிறுத்துவதற்குமான அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

மேலும் ஜனநாயக நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை குறைமதிப்புக்குட்படுத்துகிறது. இது வேண்டுமென்ற நடத்தப்பட்ட ஒடுக்குமுறை. காரணத்தை கூட சொல்லாதது, அரசின் பாகுபாடு கொள்கையை தௌிவாக வௌிப்படுத்துகிறது. குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்ததற்கான காரணங்களை விசாரித்து, மத சுதந்திரத்துக்கான அரசியலமைப்பு பாதுகாக்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும் உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காட்டமாக வலியுறுத்தி உள்ளார்.

The post டெல்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: