முத்தரசன் கண்டனம் ஆளுநரை மக்கள் எழுச்சி கட்டுப்படுத்தும்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்ற ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் பண்புக்கும், கலை, கலாச்சார மரபுக்கும் எதிராக “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என முழக்கம் எழுப்பியதுடன், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களையும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்புமாறு நிர்பந்தித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும். சட்டத்துக்கும் மேலாகவும் தன்னை கருதிக் கொள்ளும் “அடங்கா பிடாரி” ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவரும், ஒன்றிய அரசும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதற்கு மாறாக ஆர்.என்.ரவியின் அடங்காப் பிடாரி செயல்கள் தொடருமானால், ஜனநாயக உணர்வு கொண்ட மக்கள் பேரெழுச்சி அவரை கட்டுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முத்தரசன் கண்டனம் ஆளுநரை மக்கள் எழுச்சி கட்டுப்படுத்தும் appeared first on Dinakaran.

Related Stories: