அம்பேத்கர் பிறந்த நாள் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

சென்னை: அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்த நாளில், அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தியவர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர். மிகுந்த கஷ்டங்களுக்கும், கொடுமைகளுக்கும் இடையில் அவர் நடத்திய போராட்டங்கள் ஈடு இணையற்றது.

அவரது எழுச்சியூட்டும் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு பாடமாக திகழ்கிறது. அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க செயலாற்றி வருகிறார் நமது பிரதமர் மோடி.அம்பேத்கர் தொடர்புடைய 5 முக்கியமான இடங்களை புனரமைத்து, அவற்றை பஞ்ச தீர்த்தங்களாக அறிவித்து சிறப்பு செய்தது மோடி தலைமையிலான அரசு தான். அவரது கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அம்பேத்கர் பிறந்த நாள் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: