அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி

 

சிவகங்கை, ஏப். 12: சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி இல்லாமல் நேரடியாகவோ, தபால் மூலமோ விண்ணப்பித்தால் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இணையதளத்தில் ஏப். 16ம் தேதி முதல் மே 6ம் தேதி பிற்பகல் 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.100. பயிற்சி கட்டணம் ரூ.20,750. பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்பயிற்சி தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற கல்வி தகுதியுடைய கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். 1.5.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: