ஜெருசலேம்: தாக்குதலில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் தண்டனை காலம் முடிந்த நிலையில் இஸ்ரேல் விடுவித்துள்ளது. ஜெருசலேமில் கடந்த 2015ம் ஆண்டு யூத குடியிருப்புக்குள் நுழைந்த பாலஸ்தீனியர்களான அகமத் மனஸ்ரா(13) மற்றும் அவரது உறவினர் ஹாசன்(15) ஆகியோர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஹசான் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கில் மனஸ்ரா கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஒன்பதரை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். தனிமையில் சிறையில் அடைக்கப்பட்டதால் மனஸ்ரா மனநலம் பாதிக்கப்பட்டார். எனவே அவரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. எனினும் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் தண்டனை காலம் முடிந்த நிலையில் மனஸ்ரா இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
The post இஸ்ரேல் சிறையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர் விடுவிப்பு appeared first on Dinakaran.