திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது நவுபல் (33). இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இரவில் கொரோனா பாதித்த ஒரு இளம்பெண்ணை அடூர் அரசு மருத்துவமனையில் இருந்து பந்தளம் கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றார். அப்போது வழியில் ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் ஆம்புலன்சை நிறுத்திய நவுபல், அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். இதன் பின்னர் அந்த இளம்பெண்ணை அவர் பந்தளம் மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் அந்த மருத்துவமனையில் இருந்த நர்சிடம் கூறினார். இதுகுறித்து பின்னர் பந்தளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலை கைது செய்தனர். இவர் மீது பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பத்தனம்திட்டா முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலுக்கு ஆயுள்சிறையும், ரூ. 1.08 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
The post ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் சிறை appeared first on Dinakaran.