நித்ரா: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். போர்ச்சுகல் பயணத்தை முடித்த அவர் புதன்று ஸ்லோவாக்கியா சென்றார். அங்கு வெளியுறவு துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்லோவாக்கியா – இந்தியா வணிக மன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ, ‘‘ஸ்லோவாக்கியா தனது பணியாளர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கடின உழைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களை தேடி வருகின்றது.
ஸ்லோவாக்கியவின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவின் திறமை ஒரு மதிப்புமிக்க பங்காக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. ஸ்லோவாக்கியா போன்ற நண்பர்களுடன் கூட்டாக இதனை செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவில் உற்பத்தி செய் என்ற எங்கள் முயற்சியில் ஸ்லோவாக்கியா நிறுவனங்களை இணையுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.
The post மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வேண்டும்: ஸ்லோவாக்கியா நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் அழைப்பு appeared first on Dinakaran.