லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கண்டித்தும், பல மாதங்களாக சிறையில் உள்ள இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது சாலைகளில் தடுப்புகளை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
The post பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம்: 100 பேர் கைது appeared first on Dinakaran.