விழுப்புரம்: விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில் உள்ள 75 வருட பழமையான மாரியம்மன் கோவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. தெருவின் மையப் பகுதியில் உள்ள கோயிலை இடிக்குமாறு ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது.