இந்த சம்பவம் குறித்த சர்ச்சை அடங்குவதற்குள் கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக படகில் வந்து தமிழ்நாட்டில் கழிவுகளை திறந்து விடுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா?. தமிழக கடலில் படகில் இருந்து கழிவுகளைத் திறந்து விடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; “இது தமிழகத்தில் நடந்த சம்பவம் அல்ல. கடலில் கழிவுகள் கலப்பது போன்று உருவாக்கப்பட்ட இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்டது. கடலில் கழிவுகளைக் கலப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட இக்காணொளி AI Aboutine எனும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ போலவே செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களையும் அந்த வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். எனவே வதந்தியை பரப்பாதீர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கேரள கழிவுகள் தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் கொட்டப்படுகிறதா?: தகவல் சரிப்பார்ப்பகம் விளக்கம் appeared first on Dinakaran.